Tuesday, 1 October 2013

Kalaivani Senthilkumar shared ரிலாக்ஸ் ப்ளீஸ்'s photo.
கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள்!!!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று விதமான குணாதிசயங்கள் இருக்கும். சோதனை கால கட்டத்தில் எந்த குணம் வெளிபடுகிறதோ, அந்த குணமே அந்த மனிதனுக்கு பிரதானமாக இருக்கும். உதாரணத்துடன் பார்க்கலாமா?

கொதிக்கும் நீரில், போடப்பட்ட மூன்று பொருட்கள்.

ஒரு காரட்...
ஒரு முட்டை..
சில காபி கொட்டைகள்...

சில நிமிடங்கள் கழித்து நமக்கு என்ன கிடைக்கும்?

முதலில் உறுதியாக இருந்த காரட், தன் உறுதி தன்மையை இழந்து இருக்கும் .

முதலில் ஓட்டிற்குள் திரவமாக இருந்த முட்டை, இறுகி இருக்கும்.

காபி கொட்டைகள் தன் பிரத்யேக இயல்பையும், வாசனையையும், நீரில் இறக்கி அதன் தன்மையை மாற்றி இருக்கும்.

சூழல் ஒன்றே தான்! இதில் நாம் யார்? நம் குணம் என்ன என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.


- Amutha Valli.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

No comments:

Post a Comment